அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று (07) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்தாக நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியில் “சைக்கிள்” சின்னத்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

மைத்திரிக்கு இடைக்காலத் தடையுத்தரவு

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்