அரசியல்உள்நாடு

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் பொய்யானது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை விரைவில் தீர்மானிக்கப்பட்டு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை ஸ்தாபிப்பதற்கு தேவையான அதிகாரிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கற்குழியில் நீராட சென்ற தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி பலி.

கப்ராலின் இடத்திற்கு ஜயந்த கெட்டகொட நியமனம்

போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் பிடியில்..