அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் – அருண் சித்தார்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் என சர்வஜன அதிகாரம் கூட்டணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார் தெரிவித்துள்ளார்.

இன்று (06) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு தெரிவிக்க எங்களிடம் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த புதிய இளைஞர்கள், யுவதிகள், அரசியல் செய்ய விரும்புபவர்கள் ஒரு செய்தி நாங்கள் கூற விரும்புகின்றோம்.

நாங்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் இணைந்து பல காலமாக வேலை செய்து இருக்கின்றோம். ஆனால் எங்களின் உழைப்பிற்கு சரியான இடத்தை யாரும் எங்களுக்கு தரவில்லை என தெரிவித்தார்.

-பிரதீபன்

Related posts

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் வழமைக்கு

பாண் விலை ரூ.30 இனால் அதிகரிப்பு

இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை