உள்நாடு

மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை உடனடியாக ரத்து செய்த நீதிமன்றம்

பொத்துவில் பிரதேசத்திலுள்ள அருகம்பே Surfers Villaவிற்கு வழங்கப்பட்டிருந்த மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தினை உடனடியாக இரத்துச் செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) எழுத்தாணை (ரிட்) பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

பொத்துவில் ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி அக்பர் ஹசன், மொஹிதீன் பிச்சை ஹாரூன் மற்றும் பகீர் மொஹிதீன் யசீன் கியாத் ஆகியோர் சேர்ந்து தாக்கல் செய்த‌ ரீட் மனு மீதான தீர்ப்பின் தீர்ப்பினை அறிவித்தே குறித்த மதுபானசாலை உரிமத்தை இரத்து செய்து நீதிமன்றம் கட்டளையிட்டது.

சி.ஏ.ரிட்/346/2020 எனும் குறித்த வழக்கில், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேகோன் தலைமையில் நீதிபதி எம்.ஏ.ஆர். மரிக்கார் ஆகியோர் உள்ளடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அறிவித்தது.

இதற்கமைய கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி மதுவரித் திணைக்களத்தினால் Surfers Villaவிற்கு வழங்கப்பட்டிருந்த மதுபானசாலை உரிமமானது வர்த்தமானி வர்த்தமானி விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக வழங்கப்பட்டுள்ளது என மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் முன்வைத்த வாதங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனால் அந்த்த மதுபானசாலை உரிமத்தை இரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றத்தினால் எழுத்தானை பிறப்பிக்கப்பட்டது. .

இந்த மனுவின் பிரதிவாதிகளாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ. போதரகம, பிரதிப் பணிப்பாளர் நாயக் மதுவரித் திணைக்களம் (வருமானம்),உதவி ஆணையாளர் எல்.ஜே. ரணவீர, மதுவரி அத்தியட்சர் என். சுசாதரன், மதுவரித் திணைக்கள அம்பாரை பொறுப்பதிகாரி என்.சிரிகாந், உள்ளிட்ட 8 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி ஆசாத் ஆதம்லெப்பை ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சட்டத்தரணி சுபுன் திசாநாயக்கவுடன் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மனுதாரர்களுக்காக ஆஜரானார்.

-எம்.எப்.எம்.பஸீர்

Related posts

உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து விலைமனுகோரல்

நள்ளிரவு முதல் புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் 24 மணித்தியால வேலை நிறுத்தம்

விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு