முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிலிண்டர் சின்னத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தனது தரப்பு இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கட்சி உயர் மட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இறுதி முடிவை கூறுவதாக இன்றைய (03) கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்குள் புதிய மாற்றங்களை கொண்டுவர போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.