அரசியல்உள்நாடு

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2025 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (02) விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதி பாடலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

அதற்கமைய, சம்பிக்க ரணவக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி அமரசிறி பண்டிதரத்ன, நீதிமன்றத்தில் சில விடயங்களை முன்வைத்தார். இந்த வழக்கின் விசாரணைகளை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்படி, இந்த வழக்கை எடுத்துக்கொள்ள பிறிதொரு திகதியை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை 2024 பெப்ரவரி 28ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இராஜகிரிய பிரதேசத்தில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தி நபரொருவரை விபத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் பேரூந்து குடைசாய்ந்ததில் 35 பேருக்கு காயம்

வானிலை முன்னறிவிப்பு

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு