உள்நாடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு ஆர்ப்பாட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலர் கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (30) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது.

பின்னர், பரீட்சையை மீள நடத்துவது குறித்துத் தீர்மானிப்பதற்காகக் கல்வி அமைச்சினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என அக்குழு நேற்று (29) அறிவித்திருந்தது.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்குக் கசியப்பட்ட மூன்று வினாக்களுக்கான புள்ளிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அக்குழு அறிவித்திருந்தது.

இதனையடுத்து, பெற்றோர்கள் சிலர் ஒன்றிணைந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

எண்ணெய் விலை குறித்து அமைச்சர் ஒரு அறிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு