அரசியல்உள்நாடு

ஐ.ம.ச. வுடன் கூட்டணியாக கலந்துரையாடத் தயார் – மனோ கணேசன்

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மாற்றங்கள் நிறைவடைந்ததன் பின்னர், பொதுத் தேர்தல் தொடர்பில் கூட்டணியாக கலந்துரையாட தயாராகவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிப்பதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று (27) அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போயுள்ளது. மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது. எனவே, நிச்சயமாக மாற்றமொன்று ஏற்பட வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மாற்றங்களை செய்துகொண்டதன் பின்னர் கூட்டணியாக கலந்துரையாட முடியும். நாங்கள் தனிக் கட்சி.

தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அடிப்படையில் இம்முறை மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்களில் எங்களின் ஆதரவாளர்கள் வாக்குகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். எங்கள் மக்கள் எங்களின் நிலைப்பாட்டை ஏற்று நடந்திருக்கிறார்கள். அது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தெரியும்.

எங்கிருந்தாலும் நாங்கள் நிலைத்திருப்போம். இன்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்.

தொடர்ந்தும் அங்கம் வகிக்கும் விருப்பத்துடனேயே இருக்கிறோம். அதற்கான அடிப்படையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

UTV உடன் 72வது சுதந்திர தினம் [VIDEO]

ரிஷாதின் விடுதலைக்கு கொழும்பிலும் ஆர்ப்பாட்டம் [VIDEO]

ராஜிதவுக்கு எதிரான மனு விசாரணை செவ்வாயன்று