அரசியல்உள்நாடு

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது – காஞ்சன

உர மானியம் அதிகரிப்பு உட்பட பல அரசாங்க முயற்சிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டதாக விஜேசேகர தெரிவித்தார்.

புத்துயிர் பெற்ற கொள்கைகளில் உர மானியத்தை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிப்பது மற்றும் மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை அறிமுகப்படுத்துவது ஆகியவை அடங்குமெனவும் ஜனாதிபதி அநுர திஸாநாயக்கவின் கீழ் இந்த திட்டங்கள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விஜேசேகர தெரிவித்தார்.

Related posts

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று

ஜனநாயகத்திற்கு மரண அடி – மஹிந்த தேசப்பிரிய.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு