உள்நாடு

கலாம் உலக சாதனையில் இடம் பிடித்த ஹென்ஸாz அய்ஸzல்

கும்புக்கந்துரையை சேர்ந்த ராசிக் பாத்திமா ருஸைதா – பேராதனையைச் சேர்ந்த அல்பஹத் தம்பதியரின் மகள் ஹென்ஸாz அய்ஸzல் 27-04-2022 (2 வயது) தற்போது கலாம் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

85 ற்கும் மேற்பட்ட நாடுகளையும் அதன் தலைநகரங்களையும் அடையாளம் கண்டு சொல்வதிலும் சூரிய குடும்பங்கள், இலங்கை அரசியல்வாதிகள், பல்வேறு தானியங்கள், இலங்கையின் மத மற்றும் தேசிய சின்னங்கள்,
விலங்குகள், ஊர்வன, உடலின் பாகங்கள், ஆங்கில எழுத்துக்கள், வீட்டுப் பொருட்கள், பழங்கள், அல்குர்ஆன் சூராக்கள், அரபு துஆக்கள், A-Z வார்த்தைகள், விலங்குகளின் வீடுகள், தொழில்கள், கொடிகள், எண்கள், செயல் வார்த்தைகள், பூச்சிகள், பொது இடங்கள், உடைகள், காய்கறிகள், இனிப்புகள், விலங்குகளின் ஒலிகள், வாகனங்கள், விளையாட்டுக்கள் உட்பட மொத்தமாக 1031 ற்கும் மேற்பட்ட படங்களையும் அடையாளம் கண்டு சொல்வதின் ஊடாக அதீத நினைவாற்றல் கொண்ட குழந்தை (EXTRAORDINARY GRASPING POWER GENIUS KID) என்ற பட்டத்தை பெற்று கலாம் உலக சாதனை விருதை வென்றுள்ளார் .

சாதனை திகதி 26-08-2024. இந்த சாதனை கலாமின் உலக சாதனைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் சார்பாக, உறவினரான தி.மு.க கட்சியின் திருச்சி மாவட்ட உறுப்பினர் சர்புதீன், உறவினர் அக்பர், சகோதரர் சஹ்லான் மற்றும் அவரது நண்பர் ஆகியோருக்கும், மேலும் இந்த சாதனையை நடத்த உறுதுணையாக இருந்த ஸ்பான்சர் FACTORY OUTLET DIGANA விற்பனையக உரிமையாளருக்கும் சிறப்பு நன்றிகள்.

இந்த குழந்தையின் சாதனைகள் மென்மேலும் தொடர எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related posts

சவூதி அரேபியா தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்குமிடையில் சந்திப்பு

editor

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் எம்.எஸ்.தௌபீக்.

editor

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து தௌபீக் இடைநிறுத்தம்