அரசியல்உள்நாடு

அநுரவின் தலைமைத்துவம் எனது தந்தையின் படுகொலைக்கு நீதி வழங்கவேண்டும் – லசந்தவின் மகள்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த லசந்தவிக்கிரமதுங்கவின் படுகொலைக்கு புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க நீதிவழங்கவேண்டும் என லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு எதிராக உண்மையை பேசியமைக்காக நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எனது தந்தையின் உயிருக்காக நீதியை பெற்றுக்கொள்வது குறித்து நானும் எனது குடும்பமும் உறுதியாக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தின் முன்னால் உண்மைய பேசியமைக்காக 15 வருடங்களிற்கு முன்னர் நியாயமற்ற விதத்தில் பறிக்கப்பட்ட எங்களின் தந்தைக்கு உயிருக்கு நீதியை பெற்றுக்கொள்வது குறித்து நானும் எனது குடும்பமும் தளராத உறுதியுடன் காணப்படுகின்றோம் என அறிக்கையொன்றி;ல் அவர் தெரிவித்துள்ளார்.

15வருடங்களாகின்ற போதிலும் அந்த வலி வேதனை தொடர்கின்றது,ஆனால் உண்மை பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவது குறித்து நான் மிகவும் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் எனது தந்தையின் படுகொலை குறித்து அர்த்தபூர்வமான நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது இது நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தேர்தல் முடிவுகள் எனது நம்பிக்கையை புதுப்பித்துள்ளன.ஜேவிபி வரலாற்றுரீதியில் அதிகாரவர்க்கத்தினை கடுமையாக விமர்சித்து வந்துள்ளது, இலங்கையின் சமீபத்தைய மனித உரிமை வரலாற்றில் இடம்பெற்ற அநீதிகளிற்கு தீர்வை காண்பதில் இந்த புதிய தலைமைத்துவம் புதிய நோக்கத்தினை கொண்டுவரும் என நான் நம்புகின்றேன்.

எங்களின் துணிச்சலான திறமை மிக்க சிஐடி அதிகாரிகள் சானி அபயசேகர நிசாந்த டி சில்வா போன்றவர்களிடம் பெருமளவு ஆதாரங்கள் காணப்பட்ட போதிலும், கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் எனது தந்தையின் படுகொலை குறித்து அர்த்தபூர்வமான நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டது இது நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் நிலவுவதை வெளிப்படுத்தியுள்ளது.

மக்;கள் தங்கள் எண்ணத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள், ராஜபக்சவின் பயங்கர ஆட்சியின் கீழ் பயங்கரமான இழப்புகளை சந்தித்த எனது தந்தைக்கும் ஏனைய குடும்பங்களிற்கும் நீதியை வழங்குவேன் என உறுதியளித்துள்ள அனுரகுமாரதிசநாயக்கவை நாங்கள் வாழ்த்துக்கின்றோம்.

இலங்கையில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுவதற்காக நாங்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆர்வமாகவுள்ளோம்.

நீதிக்கான பாதை நீண்டமானது கடினமானது என்ற போதிலும் எனது தந்தைக்கான எனது போராட்டத்தில் அவரது பாரம்பரியத்தை கௌரவிப்பதில் நான் உறுதியாகயிருக்கின்றேன்.

Related posts

ஹம்தியின் மரணம் தொடர்பில் வாய் திறந்த லேடி ரிஜ்வேய் வைத்தியசாலை பணிப்பாளர்!

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

தபால் மூல வாக்களிப்பு – 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று