நாட்டில் தற்போது அபத்தமான அரசியல் காணப்படுவதாக சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மொனராகலை நகரில் இன்று (16) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், சில அரசியல் தலைவர்கள் மேடைகளில் ஒருவரையொருவர் கேலி செய்து கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
“மாற்றம் கேட்டு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை போதவில்லையா. மாற்றம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
எனவே அதிகாரத்தை எனக்கு வழங்குங்கள் என்று தற்போது அனுரகுமார கூறுகிறார். நண்பர் என்று தன்னை அழைக்க வேண்டாம் என ரணிலிடம் கூறுகிறார்.
அனுரகுமார விவசாய அமைச்சராக இருந்த போது அவருக்கு கீழ் அதிகமான நிறுவனங்கள் காணப்பட்டன.
மறுபக்கம் ரணில் இருக்கிறார். அவர் என்ன செய்தார், கடந்த 2 வருடங்களில் வாழ்க்கைத் தரம் கீழ்நோக்கி போகும் போது ஒரு பேரணியாவது காலிமுகத்திடலில் இடம்பெற்றதா, ஒரு பேரணி கூட நடக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்த ஒரு பேரணியை உருவாக்கினார்கள்.
அந்த பேரணி விகாரமஹா தேவி பூங்காவுக்கு வந்தது. பூங்காவுக்கு அருகில் வரும்போது நண்பர்கள் இருவரும் பேசி வைத்தவாறு நீர் பிரயோகம் மேற்கொள்ளும் போது நான் இந்த வாயில் வழியாக செலவேன் என்பார். இந்த ஸ்கிரிப்ட் தெரியாமல் முன்னே சென்றதால் அணிவகுப்புக்கு வந்தவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டனர்.
இதுதான் இன்று இருக்கும் அபத்தமான நாடக அரசியல். இருவரும் இரண்டு மேடைகளில் ஏறி ஒருவரையொருவர் கேலி செய்து கொள்கிறார்கள். மாலையில் நாங்கள் இந்த நகைச்சுவைகளைப் பார்க்கிறோம்.”