அரசியல்உள்நாடு

வாக்காளர் அட்டையை விநியோகித்த தபால் ஊழியர் மீது தாக்குதல் – ஒருவர் கைது.

வாக்காளர் அட்டையை  விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய ஊழியரை தாக்கிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் களுத்துறை ஜாவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தற்சமயம், தபால் நிலைய ஊழியர் வைத்தியசாலையில் அனுமதியாகும் படிவத்துடன் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பேச்சி முற்றி இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆனைவிழுந்தான் சம்பவம் – கைதியின் விளக்கமறியல் நீடிப்பு [UPDATE]

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மறுசீரமைக்கப்படும் இலங்கை மின் சார சபை