அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உள்ள  மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , இரண்டு தேர்தல் பிரசாங்களில் பங்கேற்பதாக யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில்  இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இல்லத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை மாவை சேனாதிராஜா, இந்து சமய முறைப்படி வரவேற்றார்.

மாவை சேனாதிராஜாவின் தனிப்பட்ட அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி, அவரின் இல்லத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts

MT New Diamond – தீ வெற்றிகரமாக கட்டுப்பாட்டினுள்

நாட்டில் மேலும் அதிகரிக்கும் கொரோனா

இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் [VIDEO]