அரசியல்உள்நாடு

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் அமைச்சர்கள் இன்றையதினம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட குழுவினரே இன்று காலை யாழ் நகரில் பிரசார நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நல்லூர் சங்கிலியன் தோப்பு மற்றும் உடுப்பட்டி கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள பிரசார கூட்டங்களில் பங்கேற்பதற்காக ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து சம்மாந்துறை நகரில் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (07) தேசிய காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், சம்மாந்துறை தொகுதி இளைஞர் அமைப்பாளருமான ஆகிப் அன்சாரின் நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைக்கான வட்டார அமைப்பாளர்களான எம்.எச்.எம். அஸ்வர், ஏ.எல். இப்ராலெப்பை, எம்.எம். இஸ்மாயில் ஆகியோரும் கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related posts

வாக்கெடுப்பு இன்றி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிறைவேற்றம்

பொலிஸ் பாதுகாப்புடன் அரச காணி பிடிக்க சென்ற ஊடகவியலாளர் – பிரதேச மக்களால் விரட்டியடிப்பு.

“இலங்கைக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவியது”