அரசியல்உள்நாடு

15 ஆம் திகதிக்குள் 732 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த தவறினால் நாடு வங்குராேத்தாகும் – ஐக்கிய தேசிய கட்சி எச்சரிக்கை

வெளிநாட்டு வனிக கடன் உரிமையாளர்களுக்கு எதிவரும் 15ஆம் திகதிக்கு முன்னர் 732 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த தவறினால் அவர்கள் வழக்கு தொடுப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால்  நாடு வங்குராேத்தாகுவதை தவிர்க்க முடியாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டு வனிக கடன் உரிமையாளர்களின் பெற்றுக்கொண்டுள்ள 732 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த மாதம் 15ஆம் திகதிக்குள் செலுத்தி முடிக்க வேண்டும்.

செலுத்த தவறினால் அவர்கள் அமெரிக்காவில் வழக்கு தொடுத்து, கடனை செலுத்துமாறு உத்தரவொன்றை பெற்றுக்கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த கடனை செலுத்த தவறினால் நாடு வங்குராேத்தாகும் அபாயம் இருக்கிறது.

ஏற்கனவே இலங்கை அரசாங்கம் கடன் செலுத்த தவறி இருப்பதாக தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டடிருந்தபோது, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் அந்த விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதால், நாணய நிதியம், அது தொடர்பாக அமெரிக்க ரிசவ் வங்கிக்கு தெளிவுடுத்தியதால், குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை பிற்போட்டுள்ளது.

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியுடனே தயாரிக்கப்பட இருக்கிறது. தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால், நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அவ்வாறே முன்னெடுத்து செல்வதாக தெரிவித்திருக்கிறார்.

ஆனால் சஜித், அனுர யாராவது வெற்றிபெற்றால், அவர்கள் நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை திருத்துவதாக தெரிவித்திருக்கின்றனர். நாணய நிதியம் இவர்களின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து, ஒதுங்கிக்கொண்டால், என்ன செய்வது? நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ள தங்களின் கொள்கை பிரகடனங்களில், ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடனத்திலேயே நாட்டை கட்டியெழுப்பி, பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏனைய வேட்பாளர்களின் கொள்கை பிரகடனங்களில் நாட்டின் உண்மையான பிரச்சினைக்கு தீர்வு இல்லை. வெறும் வாக்குறுதிகளே அவர்கள் அளித்து வருகின்றனர். சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திஸாநாயக்கவும் போட்டிக்கு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

வங்குராேத்து அடைந்த ஒரு நாடு இரண்டு வருடங்களில் உலகில் எந்த நாடும் இயல்பு நிலைக்கு வந்ததில்லை.

ஆனால் ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்களில் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவந்துள்ளதையிட்டு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன ஆச்சரியமடைந்துள்ளன. ரணில் விக்ரமசிங்கவின் திறமையும் அனுபவமுமே இதற்கு காரணமாகும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

யுக்திய சுற்றிவளைப்பில் வெளியான பெறுபேறுகள்!

பாம் எண்ணெய் தடையும் மல்லுக்கட்டும் சிற்றூண்டி உற்பத்திகளும்

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு – அரசாங்கம் விழுந்துவிடும் என்கிறார்கள் – ஜனாதிபதி அநுர

editor