அரசியல்உள்நாடு

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு ? எனக்கு எதுவும் தெரியாது – மாவை சேனாதிராஜா

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிவிப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியமை குறித்த செய்தி ஊடகங்கள் வாயிலாகவே தாம் அறிந்து கொண்டதாக எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் தெரிவித்தார்.

எனினும் தமிழரசுக் கட்சி மத்திய குழுத் தீர்மானம் என்பது கூட்டு தீர்மானே என கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்து இருந்தார். 

அதனை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மறுப்பு தெரிவித்து அது கட்சியின் தீர்மானம் இல்லை என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் கட்சியின் செயலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவில்லை. மத்திய குழுத் தீர்மானம் என்பது ஒரு கூட்டுத் தீர்மானம். மத்திய குழுவில் 30 பேர் கலந்து கொண்டார்கள். 

மாவை சேனாதிராஜாவிற்கு அறிவித்து அவரும் வருவதாக இருந்தார்.

உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்து அவர் கலந்து கொள்ளவில்லை.

மூத்த துணைத் தலைவர் தலைமையில் தான் கூட்டம் நடைபெற்றது.

மத்திய குழுவின் தீர்மானம் தான் சஜித் பிரேமதாசவிற்கு அதரவு வழங்குவது என்பது. 

அதனையே அறிவித்தோம். எதிர்வரும் 4ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பு. அதனால் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

அவருடன் ஏற்கனவே நான் கதைத்துள்ளேன். இது தொடர்பாக நான் கதைக்கிறேன்.  மூத்த துணைத்தலைவர் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து மாவை சேனாதிராஜாவுடன் கதைப்பார் என்றார்.

Related posts

MV Xpress pearl : ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க கோரிக்கை

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு கோப் குழு அழைப்பு

மாணவர் ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்