உள்நாடு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தைப் புனரமைப்புச்செய்வதற்கு தனியார் நிறுவனத்திற்கு  ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  பந்துல குணவர்தன சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் அனுசரணையுடன் வீதிக்கட்டமைப்பு அபிவிருத்திக்கருத்திட்டத்தின் கீழ் பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தில் எஞ்சியுள்ள நிதியின் மூலம் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வீதியின் குறிஞ்சாக்கேணி பாலத்தைப் புனரமைப்புச்செய்வதற்கான ஒப்பந்தத்தை தனியாக கட்டம் தனியான கடித உறை முறைமையின் கீழ் விலைமுறிகோரப்பட்டது. அதற்காக, 09 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றன.

அதற்கிணங்க,அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந் துரைக்கமைய,விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள விலைமனுதாரரான  கன்ஸ்ரக்ஷன் (தனியார்) கம்பனிக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

விசாரணைக்கு 4 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

இந்திய கடற்றொழிலாளர்களை தாக்கிய கடற்படை – எழுந்துள்ள பிரச்சினை.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு