அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி முதல் தற்போது வரை மொத்தம் 925 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்  தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் தேர்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 901 முறைப்பாடுகளும், வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும், மேலும் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள் பெறப்படுவது மிகவும் பாரதூரமான நிலைமை எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சுமார் 250 முறைப்பாடுகள் பெவரல் அமைப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

போக்குவரத்து தண்டப்பணம் செலுத்த சலுகைக் காலம் வழங்க தீர்மானம்

பரீட்சைகள் திணைக்கள நடவடிக்கைகள் இலத்திரனியல் மயமாகிறது

உயிர்த்த ஞாயிறு தாக்குததாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்