அரசியல்உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் – மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் ஒன்றை பிற்போடுவது தவறான செயல் என நீதிமன்றம் அங்கீகரித்தமை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய தேசியக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் வைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் அல்லது ஒத்திவைப்பதன் ஊடாக மக்களின் உரிமைகள் மீறப்படுவதாக உயர் நீதிமன்றம் இதற்கு முன்பு பலமுறை தீர்ப்பளித்துள்ள நிலையில், ​​இந்த தீர்ப்பு தொடர்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
நீதி வழங்கப்பட்டுள்ளதாகவே நான் காண்கிறேன்.

ஆனால் மிகவும் தாமதம். இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் இந்த ஆண்டு இந்த வாக்கெடுப்பை நடத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும்  என்று நாங்கள் நம்புகிறோம்

Related posts

அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணங்கள்!

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் மாற்றம் இல்லை

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது