அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகாரபீடம் மற்றும் உயர்பீட உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் வேட்பாளராக போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சிநேகபூர்வ இராப்போசன விருந்துபசார வைபவம் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்று முன்தினமிரவு (17) இரவு கொழும்பு கொள்ளுப்பிடி மென்டரின் ஹோட்டலில் இடம்பெற்றது.
அகில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடளாவிய ரீதியிலான அதன் அரசியல் அதிகார பீட மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டுப் பிரதானி சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க மற்றும் லக்ஷ்மன் பென்சேகா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள், நாட்டின் சமகால அரசியல் பொருளாதார விவகாரங்கள் குறித்து இங்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் அரசியல் அதிகார பீடம் மற்றும் உயர்பீட உறுப்பினர்களுக்கும் இடையே மிக நீண்ட நேரம் சினேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது.