அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் செயலாளர் கைது.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளரும் மற்றுமொரு அரசியல் செயற்பாட்டாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் மட்டக்களப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலன்னறுவையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் முறைப்பாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தன்னிடம் 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியதாக குறித்த வர்த்தகர் முறைப்பாடு அளித்துள்ளார்.

Related posts

மக்களுக்கு தேவையான ஆடைகளை போதிய அளவு வழங்க தயார்

பிரிவினைவாத அரசியல் இனிமேலும் எடுபடாது – ஜனாதிபதி அநுர

editor

கடவுச்சீட்டு, வீசா மோசடிகள் – 219 வெளிநாட்டவர் இதுவரை கைது – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor