அரசியல்உள்நாடு

ஹமாஸ் இயக்கத் தலைவரின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்.

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையாக கண்டித்துள்ளார.

இந்த படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இரானில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகில் ஏற்படக் கூடிய நிலைமையினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதுகாப்பு, பொருளாதார பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவையும், பொருளாதாரம் தொடர்பான குழுவையும், இவற்றைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor

கடந்த இரண்டு மாதங்களில் 8,422 smart phones திருடப்பட்டுள்ளது

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மின்சாரத்துறையினர்