அரசியல்உள்நாடு

நாமலுக்கு எதிராக நான் முறைப்பாடளிக்கவில்லை – அமைச்சர் பந்துல.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஹோமாக பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை அமைச்சர் பந்துல குணவர்தன மறுத்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற போது, இது தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே அமைச்சர் பந்துல இவ்வாறு மறுப்பு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்று எவ்வித முறைப்பாடுகளையும் அளிக்கவில்லை. எனக்கு ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டாலும் அவை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலேயே முறைப்பாடளிப்பேன்.

அண்மையில் சில குற்றச் செயல்கள் தொடர்பில் கூட நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருக்கின்றோம்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாவதற்கு என்னால் பொறுப்பேற்க முடியாது.

நாமல் ராஜபக்ஷவுடன் எனக்கு எவ்வித முரண்பாடும் கிடையாது. அரசியல் குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற போதும், சுமூகமாக வழமை போன்று அவருடன் கலந்துரையாடினேன் என்றார்.

– எம்.மனோசித்ரா

Related posts

அரசின் Online சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதாவுல்லாஹ் , அலி சப்ரி ரஹீம்!

இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நிலையான சட்டங்களும் நிரந்தரத் தேசியக் கொள்கையும் அவசியமாகும்

‘கோட்டாபயவுக்கு இலங்கையிலிருந்து செல்ல இந்தியா உதவவில்லை’