அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார் – தம்மிக்க பெரேரா.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கு தயாராகவுள்ளேன், இறுதித் தீர்மானத்தை கட்சியே எடுக்க வேண்டும்.

கட்சியின் தீர்மானம் ஏதுவாக இருந்தாலும் அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (27) மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் மாநாட்டில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகவுள்ளேன் என்பதை ஆரம்பத்தில் இருந்து தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். ஜனாதிபதித் தேர்தல் குறித்து கட்சி மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனை எடுத்துரைத்துள்ளேன்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி மட்டத்தில் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.கட்சி எடுக்கும் தீர்மானம் ஏதுவாக இருந்தாலும் அதை முழுமையாக ஏற்பேன் என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேரா களமிறக்கப்பட வேண்டும் என  பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்ற நிலையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் அல்லது அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னிலை உறுப்பினர்கள் உட்பட சுமார் 40 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஜனாதிபதியுடன் அரசியல் கூட்டங்களில் ஒன்றிணைந்துள்ளனர். இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து உறுதியான தீர்மானத்தை எடுக்க பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை இன்று கூடவுள்ளது.

– இராஜதுரை ஹஷான்

Related posts

ஹபரனை விவகாரம் : விசாரணை குழு நியமனம்

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்வு

தலைமன்னாரில் 79 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்