உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டவர் நாட்டின் ஜனாதிபதி.
நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் அந்த நீதிமன்றத் தீர்ப்புகளை இரத்து செய்ய பிரதமர் தீர்மானித்தால் நாட்டின் நீதிமன்றங்களை மூடிவிட்டு தினேஷ் குணவர்தன வழக்காடுபவரின் அங்கியை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்தில் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என மிஹிந்தல ரஜமஹா விஹாராதிபதி வளவ ஹங்குன வெவே தர்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தவறான வியாக்கியானம் வழங்கியதாலும் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாலும் பொலிஸ் மா அதிபர் இடைநிறுத்தப்பட்டார்.
இப்போது பொலிஸ் மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை செல்லுபடியற்றதாக மாற்ற வேண்டும், அப்போது தினேஷ் குணவர்தன இந்த நீதிமன்றங்களை எல்லாம் மூடிவிட்டு பாராளுமன்றத்தில் வழக்கை விசாரிக்க வேண்டும்.
இந்த நீதிமன்றத் தீர்ப்புகள் எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள்தான் வழக்கை விசாரிப்போம் என பிரதமர் அறிக்கை விட வேண்டும்.
அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கல்வி பாதுகாப்பு குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேரர் மேற்கண்டவாறு கூறினார்.