உள்நாடு

அதிக விலையில் பாணை விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை.

450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சோதனைகளை மேற்கொள்ளுமாறு  நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவார  புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டப்படியான எடை மற்றும் அளவிடும் கருவிகள் மீதான சோதனையின் போது 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட உதவி அளவீட்டு அலகு தர நிர்ணய சேவை அத்தியட்சகர் தில்ருக் பட்டியாபொல தெரிவித்துள்ளார்.

Related posts

சோற்றுப்பொதி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை 10% குறைப்பு

வாக்களிப்பது உங்கள் உரிமை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க

editor

குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சை; ஒருவருக்கு மட்டும் அனுமதி