உள்நாடு

அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது.

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று (21) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம், அவர் குடிவரவு – குடியல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அசங்க அபேகுணசேகர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒஸி அபேகுணசேகரவின் புதல்வராவார்.

Related posts

ஜனக பண்டாரவுக்கு எதிரான வழக்கு இரத்து

கொரோனா – ஜனாதிபதி செயலணி அவசர விசேட கலந்துரையாடல்

வாக்குமூலத்தில் சூத்திரதாரி பெயரை கூறாத மைத்திரி !