எமது நாட்டு இளைஞர்களை முற்றிலுமாக ஒதுக்கப்படும் ஒரு சகாப்தம் உதயமாகியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு அல்லது ஆறு வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரம் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சாரம் எமது நாட்டில் இருந்து வருகிறது.
அவ்வாறு நடந்து கொள்வது தவறான செயலாகும். இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நிலையான சட்டங்களும் நிலையான தேசியக் கொள்கையும் வகுக்கப்படுவது அவசியமான ஒன்றாகும்.
இதனை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த தேசிய இளைஞர் கொள்கையானது ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட இளைஞர் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டமையும். இந்நாட்டில் இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவை பாராளுமன்றத்தின் ஊடாக உருவாக்குவது காலத்தின் தேவையாக ஐக்கிய மக்கள் சக்தி கருதுகிறது.
எமது நாட்டில் நிலையான இளைஞர் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நமது நாட்டு இளைஞர்கள் சந்தர்ப்பவாதமாக பல்வேறு கொள்கை வகுப்பாளர்களால் சுரண்டப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும், நமது நாட்டிற்கு நிலையான தேசிய இளைஞர் கொள்கையொன்று அவசியமாகும்.
தேசிய இளைஞர் கொள்கையை உருவாக்கி, அந்த நிலையான கொள்கையின் மூலம் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளை உணர்ந்து ஒரு நிலையான தேசிய திட்டத்தை ஆரம்பிப்பேன். இளைஞர்களின் உரிமைகள் ஒரு குரல் எழுப்பலாக மட்டும் நின்றுவிடாது, அந்தக் குரலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இலகுவில் மாற்ற முடியாத ஒரு ஷரத்தாக இளைஞர்களுக்கான உரிமையை அரசியலமைப்பில் உள்ளடக்குவது காலத்தின் தேவை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 344 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன குருநாகல், படுவஸ்நுவர மேற்கு, நாகொல்லாகொட மத்திய கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 20 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
இளைஞர்களின் உரிமைகள் குறித்து அவ்வப்போது மாநாடுகள் நடத்தப்பட்டு, புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு மேல் எதுவும் முன்னெடுக்கப்படுவதில்லை.
தேசிய இளைஞர் கொள்கைக்காக தேசிய இளைஞர் சாசனத்தை வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கட்டளைச் சட்டங்களின் ஊடாக இளைஞர் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
25 மாவட்டங்கள் மற்றும் 341 பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் உப பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய இளைஞர்களை மையமாகக் கொண்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை தாபித்து, இளைஞர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பாரிய தேசிய பொறிமுறையொன்று ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் ஸ்தாபிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இளைஞர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது நமது பொறுப்பாகும்.
இளைஞர்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய கல்வி சீர்திருத்தங்கள், திறன் விருத்தி, தொழில்நுட்பத்திற்கான அணுகல், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கான உரிமை, மேலதிக செயல்பாடுகளுக்கான உரிமை, தொழில்முனைவு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், சுற்றுச்சூழல் கல்வி, டிஜிட்டல் கல்வியறிவின் விருத்தி, சமுதாய நடவடிக்கைகளில் இளைஞர்களின் ஈடுபாடு, கல்வி உதவித்தொகை, தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு திட்டங்களை செயல்படுத்துதல், பாலின சமத்துவம், இளைஞர் பாதுகாப்பு, இளைஞர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் ஈடுபாடு, தொழில் முறை ஆலோசனை, இளைஞர்களின் தலைமைத்துவம் போன்ற தலைப்புகள் எமது நாட்டின் இளைஞர்களின் மனதில் உள்ள எண்ணங்களும் பார்வைகளுமாகும். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
கொள்கை வகுப்பாக்கத்துக்கு இளைஞர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
நிரந்தர இளைஞர் ஆணைக்குழு மற்றும் நிரந்தர இளைஞர்களுக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் இளைஞர்களின் உரிமைகளை அடிப்படை உரிமையாக்குதல்,
போலவே இளைஞர்களுடன் ஒரு சமூக உடன்பாட்டை எட்டி, இளைஞர்களின் அபிலாஷைகளை சரியான கால அட்டவணையின் ஊடாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.