அரசியல்

தேர்தலை பிற்போட முயற்சித்தால் இரத்தக்களரி ஏற்படலாம் – மைத்திரி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் ஆயிரக் கணக்கானோரின் இரத்தக்களரி ஏற்படலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து

பாராளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோரின் விபரம் வெளியானது

editor

விவசாயிகளுக்கு உர மானியம் அதிகரிப்பு – ஜனாதிபதி அநுரகுமார

editor