உள்நாடு

தடுப்பூசி செலுத்தப்பட்ட 11 மாணவர்கள் சுகயீனம்.

மிஹிந்தலை வைத்தியசாலையினால் பாடசாலை மாணவர்கள் குழுவொன்றுக்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்து காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகயீனமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் 6 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட 11 பாடசாலை மாணவர்களே இவ்வாறு தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதையடுத்து கடும் சுகவீனமடைந்துள்ளனர்.

இந்த மாணவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலைக்கு செப்சிஸ் ( septicemia) நோய்க்கு சிகிச்சை பெறச் சென்றபோது, ​​அங்கு வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமாக சுகவீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாணவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

ஐ.எஸ் நபர்கள் என கைதானோர் மதத் தீவிரவாதிகள் அல்ல – கமல் குணரத்ன

நாட்டின் பல பாகங்களில் மழை

முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்!