அரசியல்

ஜனாதிபதித் தேர்தல் – 600 முதல் 800 மில்லியன் ரூபா செலவாகலாம்.

ஜனாதிபதித் தேர்தல் அச்சுப்பணிகளுக்காக அதிகபட்சம் 600 முதல் 800 மில்லியன் ரூபா செலவாகுமென அரச அச்சகம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வாக்குச்சீட்டின் அளவைப் பொறுத்து இந்த தொகையில் மாற்றம் ஏற்படலாமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பான பத்திரங்கள் அச்சிடப்படும் என அரச அச்சகர் கூறியுள்ளார்.

Related posts

அனுரவின் உடல்நலம் பாதிப்பு – ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் வேண்டுகோள்

editor

யாழில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் கூட்டம்

editor

மஹிந்த உள்ளிட்ட மூவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்