அரசியல்

தேனில் கை வைத்தவர் விரல்களை சுவைக்காமல் இருக்கமாட்டார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் மூன்று தடவைகள் உறுதிப்படுத்திய பின்னரும் அமைச்சரவை அரசியலமைப்பு திருத்தம் மேற்கொ்ளள தீர்மானித்துள்ளமை தொடர்பில் பாரிய பிரச்சினை இருக்கிறது.

தேனில் கை வைத்தவர் விரல்களை சுவைக்காமல் இருக்கமாட்டார் என்ற சிங்கள பழமொழிக்கு ஏற்பவே ஜனாதிபதியின் நடவடிக்கை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பில் முரண்பாடு இருப்பதாக அமைச்சரவையில்  எடுத்திருக்கும் நடவடிக்கையின் பின்னணியிலேயே அதுதொடர்பான விவாதம் இடம்பெறுகிறது.

உண்மையில் அரசியலமைப்பில் முரண்பாடான நிலை இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. சிங்களத்தில் ஒரு பழமொழி இருக்கிறது, அதாவது தேனில் கை வைத்தவர் விரல்களை சுவைக்காமல் இருக்கமாட்டார் என்று.

அதனால் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒருவர், அதில் தொடர்ந்து இருப்பதற்கு தேவையான சூட்சுமங்களை தேடிக்கொண்டிப்பதே இந்த நாட்டில் இருக்கும் பிரச்சினை.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உண்மையில் யாருக்கு வேண்டுமானாலும் இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.

அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அமைச்சரவைக்கு முரண்பாடு இருந்தாலும், உயர் நீதிமன்றம் அது தொடர்பில் 3தடவைகள் உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்படியானால் அரசாங்கம் ஏன் இதுதொடர்பில் அவசரப்படவேண்டும்.

உயர் நீதிமன்றல் இதுதொடர்பில் வழக்கு தொடுத்தது யாருடைய தேவைக்கு என்பது அனைவருக்கும் தெரியும்,ஆனால்  அமைச்சரவையின் தீர்மானத்துக்கு பின்னர் அது வெளிப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் 3தடவைகள் உறுதிப்படுத்தி பின்னரும் அமைச்சரவையில் இதுதொடர்பில் ஏன் அவசராமாக தீர்மானம் மேற்கொள்ளவேண்டும் என கேட்கிறேன்.

அதனால் இதற்கு பின்னரல் மறைமுகமான வேலைத்திட்டம் இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது. பாராளுமன்றத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு தங்களின் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது.

அதேபோன்று அடுத்த தேர்தலில் பாராளுமன்றத்துக்கு வரமுடியாது என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். அதனால்  பாராளுமன்ற தேர்தலை இரண்டு வருடங்களுக்கு பிற்படுத்திக்கொள்ள முடியுமானால் இவர்களுக்கு அது மகிழ்ச்சியாகும்.

அதனால் ஜனாதிபதிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இந்த தேவை இருக்கிறது. அதனை மேற்கொள்ளவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

Related posts

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )

பாராளுமன்றத் தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

editor

ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை விசேட உரை

editor