அரசியல்

தேசிய நீர் வழங்கல் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலாமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்யை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி வைபவம் பத்தரமுல்லையில் உள்ள நீர்வழங்கல் அமைச்சில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் 09.07.2024 நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம். நபீல், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க மற்றும் ஜெயிக்கா நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி யமதா டெஸ்டிதுயா கிளைமக்ஸ் இன்டநெசனல் பிறைவட் லிமிட்டெட்டின் பிரநிதிகளும் நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் பொதுமுகாமையாளர் ரீ. பாரதிதாசன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

ஜயிக்கா மற்றும் கிளைமக்ஸ் நிறுவனத்துடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை 2023 ஒக்டோபர் மாததில் முத்தரப்பு உடன்படிக்கை ஒன்றில் டிஜிட்டல் செயற்பாட்டு மற்றும் உள்ளக செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கைச்சாத்திருந்தது.
ஆறு மாதகாலத்திற்குள் உரிய கணினி வலையமைப்பினை தயாரித்து நாடளாவிய ரீதியில் பரந்து விரிந்துள்ள வடிகாலமைப்பு சபையின் சேவை நிலையங்களிலுள்ள 2000 ற்கு அதிகமான ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வலையமைப்பினை இயக்கும் நிலைமைக்கு கொண்டு வர முடிந்துள்ளமையே இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

– அஷ்ரப் ஏ சமத்

Related posts

நாட்டுக்கும் நமக்கும் வெற்றி கிட்டும் வழி ரணிலின் வழியே – வேலுகுமார் எம்.பி

editor

ரணிலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன் – தோழராக இருக்கும் எனது அருமை அவருக்குப் புரியும் – அநுர

editor

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

editor