வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் ரனீஸ் பத்ருதீன் அவர்கள் கௌரவ வடமேல் மாகாண ஆளுநருக்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் அல்ஹாஜ் M. H. M. நவாவி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர் ரனீஸ் பதூர்தீன் அவர்களின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (08) புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.