உள்நாடு

மழையுடன் மினி சூறாவளி 12 வீடுகள் சேதம்

(UTV | கொழும்பு) –

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை பிரதேசத்தில் மழையுடனான மினி சூறாவளி காற்றினால் பல முரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் 12 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதுடன் வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக காயம் ஏதுவுமின்றி உயிர்தப்பிய சம்பவம் வியாழக்கிழமை (மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஏ.அருணன் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையினையடுத்து சம்பவதினமான வியாழக்கிழமை (4) மாலை 5 மணியளவில் திடீரென மழைபெய்ததுடன் மினி சூறாவளி காற்று வீசியதையடுத்து பிரதேசத்திலுள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் வீடுகளின் கூரை ஒடுகள், தகரங்கள் என்பன தூக்கி வீசி எறிந்ததையடுத்து ஓடுகள் வீடுகளுக்குள் வீழந்து உடைந்துள்ளது.

இந்த மினி சூறாவளி காற்றினால் 12 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2016 பிணைமுறி மோசடி : ரவி உள்ளிட்டோருக்கு விடுதலை

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம்

வரவு செலவுத் திட்டம் – 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்