அரசியல்

ஜனாதிபதித் தேர்தல் குறித்த மனு – விசாரணைக்கு ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமனம்

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடையும் தினம் தொடர்பில் நீதிமன்றத்தினால் வியாக்கியாண‌ம் வழங்கப்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் உத்தர​வை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் திங்களன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவினால் இன்று (04) பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டொ, ப்ரீத்தி பத்மன் சுரசேன மற்றும் எஸ். துறைராஜா ஆகியோர் இந்த ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாத்தில் உள்ளடங்குகின்றனர்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் பிரகாரம், ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வியாக்கியாணம் ஒன்றினை வழ்னக்க வேண்டும் எனவும் அவ்வாறு வியாக்கியாணம் ஒன்று இல்லாமல் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என மொரட்டுவை பகுதியை சேர்ந்த்த வர்த்தகரான சி.டி. லெனவ அடிப்படை உரிமை மீறச்ல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதனால் உயர் நீதிமன்றம் வியாக்கியாணம் வழங்கும் வரை, திட்டமிடப்ப்ட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலை நடாத்த இடைக்கால தடை விதிக்குமாறு மனுதாரர் இந்த மனு ஊடாக கோரியுள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக் குழு, அவ்வாணைக் குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

எம்.எப்.எம்.பஸீர்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விவசாயிகளுக்கு உர மானியம் அதிகரிப்பு – ஜனாதிபதி அநுரகுமார

editor

டயானாவுக்கு எதிரான வழக்கு நவம்பர் 4 இல் மீள விசாரணை

editor

எனது முதலாவது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் – பிரதமர் ஹரிணி

editor