(UTV | கொழும்பு) –
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் முரல் மீன் குத்தி மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் 01 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் குருநகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதான மைக்கேல் கொலின் டினோ என தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්