அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலுடன் இணைந்து, சுகாதார அமைச்சராகும் ராஜித!!

எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் சுகாதார அமைச்சர் பதவி உட்பட சுகாதார அமைச்சின் பல உயர் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பதவி விலகவுள்ளதாகவும், இம்மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நிரந்தரமாக இணையவுள்ள ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட வைத்தியர் ஜயருவன் பண்டார மற்றும் வைத்தியர் சமல் சஞ்சீவ ஆகியோருக்கு தகைமையின் அடிப்படையில் உரிய பதவிகளை வழங்காமல் சுகாதார அமைச்சரின் செயற்பாடுகள் குறித்து ஆளும் கட்சியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அத்துடன், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம், மருத்துவ விநியோகப் பிரிவு, மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, மருத்துவ பரிசோதனை நிறுவனம், அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை ஆகியனவற்றின் பதவிகளிலும் மாற்றம் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டுக்கு

ஜோன்ஸ்டனை சந்திக்க சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

editor

தொழுகை முடித்து வீடு திரும்பிய மாணவன் மீது சரமாரியான தாக்குதல் – வவுனியாவில் சம்பவம்