உள்நாடு

தரம் 1ற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதிய சுற்றறிக்கை!

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அரச பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கல்வியில் சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் இன்று ஜூன் 24ஆம் திகதி புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட சுற்றறிக்கைக்கு ஜூன் 20ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

பிறப்புச் சான்றிதழ் இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால், அந்தக் குழந்தைக்கு எந்தவித அநீதியும் ஏற்படாத வகையில் சேர்க்கப்பட வேண்டும் என்று புதிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின் பிரிவு 2.1, சில ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகள் மூலம், பிறப்புச் சான்றிதழ் இல்லாத மற்றும் ஐந்து வயதுக்கு குறைவான மற்றும் வயதுச் சான்றிதழை வழங்கும் குழந்தைகள் நியாயமற்ற அல்லது பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது என்று கூறுகிறது.

புதிய சுற்றறிக்கையின்படி, விண்ணப்பதாரர்கள் முறைகேடுகள் செய்ய முடியாது. மேலும் பல்வேறு யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு முன்னைய சுற்றறிக்கைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மேலும் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

முன்னாள் பிரதமர் உள்ளிட்ட நால்வருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொருளாதார நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு பதிப்பு இல்லை