ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தம்மிடம் பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 51% வாக்குகளைப் பெறுவது உறுதியானால், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடுவேன் என பதில் வழங்கியுள்ளதாக தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளதால், எனைய நிபந்தனைகள் அனைத்தும் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.