இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என காட்டுவதற்காக போலியான காணொளி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த காணொளிக்காக நான்கு சந்தேகநபர்களும் சத்தியப்பிரமாணம் செய்யும் சூழ்ச்சி காணொளியொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொதுவாக, ஐ.எஸ். பயங்கரவாதிகள் வலது கை கட்டை விரலை உயர்த்தி சத்தியப்பிரமாணம் செய்வார்கள் எனவும், இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான காணொளியில் இடது கையை உயர்த்தி தவறான காணொளி எடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரின் தலைவன் என கூறப்படும் ஒருவர் இந்திய பிரஜை ஒருவருடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுவந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது தீவிரவாதச் சம்பவம் அல்ல எனவும், இது நாட்டின் நன்மதிப்பைக் கெடுக்கும் என்பதால் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
TW