அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அநுர- சஜித் விவாதம் இன்று! நடக்கப்போவது என்ன?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சல்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான அரசிய விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஒன்றின் தலைவரான சட்டத்தரணி சுதர்சன குணவர்தன இரு தரப்பினருக்கும் விவாத ஒளிபரப்பு தொடர்பில், எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

கடந்த 21.03.2024 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் பொது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பரிந்துரைத்தார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பகல் நேர செய்தி ஒளிபரப்பு மற்றும் பிரதான செய்தி ஒளிபரப்பிலும் இந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதன்படி இன்று இரவு 10.00 மணி முதல் விவாதத்தை நடத்துவதற்கு கடந்த 02 மாதங்களாக தனது செய்தி ஒளிபரப்புகளில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் அர்ப்பணிப்பு குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுதர்சன குணவர்தன தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில்

அரச துறையினரின் சம்பள மீளாய்வு பற்றிய விசேட ஆணைக்குழு ஒன்றுகூடியது