உலகம்

சந்திரபாபு நாயுடு யார் பக்கமோ? அவர் தான் அடுத்த இந்திய பிரதமர் | அவரின் அறிவிப்பு இன்று!

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதில் முக்கியப் பங்காற்றவிருக்கும் சந்திரபாபு நாயுடுவை, அரசியல் பார்வையாளர்கள் கிங் மேக்கர் என குறிப்பிட்டு வருகிறார்கள். ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், அடுத்த என்ன செய்யப்போகிறது கட்சி என்பது குறித்து சந்திரபாபு நாயுடு.செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளார்.

ஆந்திரத்தில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள், மத்தியில் யாருக்கு ஆதரவு அளிப்பது என தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானார்கள் என்றார்.

நான் எதிர்பார்த்ததைவிட மக்கள் எங்கள் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். தெலுங்கு தேசத்துக்குக் கிடைத்த வெற்றி மக்களுக்குக் கிடைத்த வெற்றி. ஜெகன்மோகன் ஆட்சியில் மிக மோசமாகத் துன்புறுத்தப்பட்டேன், மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்துக்கு வரும்போது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறேன். அந்தக் கூட்டணியின் ஒரு அங்கமாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது. நாட்டில் பல்வேறு அரசியல் திருப்பங்களை பார்த்துள்ளேன். பல்வேறு அரசியல் அனுபவம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 175 பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 134 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றிபெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளான ஜனசேனை 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வென்றுள்ளன.

தெலுங்குதேசம் அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவா் சந்திரபாபு நாயுடு (74) முதல்வராக பதவியேற்கவுள்ளாா். இங்கு ஆட்சியிலிருந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 12 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

Related posts

8 கோடியை அண்மிக்கும் உலக கொரோனா பாதிப்பு

உலகில் முதன் முறையாக சீனாவில் மனிதருக்கு பரவிய H10N3 பறவை காய்ச்சல்

உலகளவில் 46 இலட்சத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள்