உள்நாடு

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

லிட்ரோ சமையல் எரிவாயு விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (4) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய விலைகள் நாளையதினம் (4) அறிவிக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்துக்கு அமைய கடந்த மாதம் (மே) 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 175 ரூபாவினாலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 70 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 32 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது. 12.5 கி.கி. சிலிண்டரின் விலை 3940 ரூபாவாகவும்,5 கி.கி சிலிண்டரின் விலை 1582 ரூபாவாகவும்,2.3 கி.கி சிலிண்டரின் விலை 740 ரூபாவாகவும் காணப்படுகிறது.

Related posts

போக்குவரத்து திணைக்களம் தற்காலிகமாக மூடப்படுகிறது

தேர்தலுக்கு பிந்தைய காலம் தொடர்பில் விசேட அறிவிப்பு

editor

மூன்றாவது அலை வௌிநாடாக இருக்கலாம் என ஆரூடம்