வணிகம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி , பொதுமக்களை பணயமாக வைத்துக் கொள்வதல்ல – நிதியமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – சர்வதேச நாணய நிதியத்தின் நிதி நாட்டை மேம்படுத்துவதற்கு உதவுமே தவிர, பொதுமக்களை பணயமாக வைத்துக் கொள்வதல்ல என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கு சர்வதேச அமைப்புக்களின் ஆலோசனைகள் தேவையற்றதாகும் என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு இறைவரி திணைக்கள பணியாளர் சங்கத்தின் 22வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிதி தொடர்பான ஒழுக்கம் சட்டவிதிகள் ஆகியன தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னெடுப்பதற்கான வழிமுறைகள் உண்டு என்றும் அவர் கூறினார்.

Related posts

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது

பருப்பு – டின் மீன் ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கம்

பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்