உள்நாடு

எரிபொருள் விலை குறைத்தாலும், பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒரு லிட்டர் டீசல் விலை 307 ரூபாயை எட்டினால் மட்டுமே பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


பஸ் கட்டண தேசிய கொள்கைகளுக்கு அமைய, 4 சதவீதமான எரிபொருள் குறைப்புக்கு மாத்திரமே கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள முடியும் எனவும் நேற்றைய தினம் டீசல் விலை 2.5 சதவீதமே குறைக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு [UPDATE]

டெலிகொம் நிறுவன தலைவர் குமாரசிங்க இராஜினாமா [VIDEO]

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை – மஹிந்த தேசப்பிரிய.