உள்நாடு

பதுளையில் கோர விபத்து – ஒருவர் பலி

தெஹியத்தகண்டிய  சிறிபுரவில் இருந்து பதுளை வரை பயணித்துக் கொண்டிருந்த தெஹியத்தகண்டிய டிப்போவுக்கு சொந்தமான லங்கம பேருந்தொன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்று மீது நேருக்கு நேர் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று (10) காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளதுறைகே ஜேம்ஸ் என்ற 79 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள வளைவில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிக்காக ஒரு வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து – நால்வர் காயம்

editor

நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

MCDONALD’S உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை- ABANS