உள்நாடு

இலங்கை வந்தடைந்த ஜப்பான் அமைச்சர்!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் மேலதிக ஆதரவை வழங்குவதே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் நோக்கமாகும்.

இதன்படி, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று முதல் LPL போட்டிகளை பார்வையிட அனுமதி இலவசம்

அதிவேக வீதி பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரு நாள் செயலமர்வு