உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டைவிட்டு ஓடும் மைத்திரி?

தான் தென்கொரியாவில் வசிக்கப் போவதாக தெரிவித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாடுகளுக்கோ தான் செல்ல விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசியல் எதிரிகளால் வெளியிடப்படும் இவ்வாறான பொய்யான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக அவர் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான கருத்து மற்றும் சுதந்திர கட்சியின் பதவி தொடர்பான விவகாரங்களில் சிக்குண்டு மைத்திரிபால சிரிசேன தவித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

60 வகையான மருந்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது

கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி